Tuesday, July 2, 2013

பணம் பத்தும் செய்யும் , பாதகம் செய்யுமா ???


கண்ணீருடன் எழுதுகிறேன்..  பெற்ற மகளை , பணத்துக்காக ,
விபச்சாரம் பண்ண வைத்த  தாய்.. ( தொலைகாட்சியில்)...
மகள் பதினாலு வயதில், யார் தந்தை என்றே தெரியாமல் ,
தாய்மையடைய .. அந்த குழந்தையை கருகலைப்பு செய்ய இயலாமல்
பெற்று கொலை செய்திருகிறார்கள்..
எங்கு போகிறது உலகம் ? ? உலகத்தை விடுங்கள்,
எங்கே போகிறது தமிழகம் ?????
உயிர் துடிக்கிறது, அந்த தாயை பார்க்கையிலே,
எவ்வாறு மனது வருகிறது ? இப்படி ஒரு செயலை செய்வதற்கு..
அதுவும் பொண்ணுக்கு, மயக்க மருந்து கொடுத்து, அறையின்,
கதவை தாழ் போட்டு .............. கடவுள் இருக்கிறாரா ???
மனது மட்டும் வேதனை கொள்ளவில்லை ,..
உயிரும் துடிக்கிறது ... தாய்மையை நினைத்து,
சாகடிக்க்கபடுவோம் என்று தெரிந்தும் மண்ணில் பிறந்த
அந்த சிசுவை நினைத்து, ...
பணம் பத்தும் செய்யும் , பாதகம் செய்யுமா ???...


Thursday, June 27, 2013

நெஞ்சு பொறுக்குதில்லையே...

உத்திரகன்ட் மாநிலத்தின் மக்களின் நிலையை நினைத்து அழுவதா ?
இல்லை மனிதர்களின் பின் வரும் செயல்களை நினைத்து சிரிப்பதா
என்று தெரியவில்லை ...

1. ராகுல் காந்தி வரும் வரை காத்திருந்து , முன்று நாட்கள்
கழித்து உதவும் பொருட்களை, சேர்த்த அரசியல்..

2. ஆந்திராவில் , திரும்பி வந்த யாத்ரிகர்களை , யார் அழைத்து செல்வது
என்ற அரசியல்..

3. ராணுவ வீரர்களை பாதுகாப்பு சூழ , அமர்நாத் யாத்திரை என்ற உறுதியுடன்
செல்லும் மக்கள்...

நெஞ்சு பொறுக்குதில்லையே , நெஞ்சு பொறுக்குதில்லையே ,
இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால் ...

என்று பாட பாரதியும் இல்லை...